சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா?

siruthanaiyam1

 

நிச்சயமாக குறையும். கண்டேன் சீதையைன்னு சொல்ற மாதிரி டக்குன்னுசொல்லறேன்னு பாக்கறீங்களா? உண்மை அதுதான்.

உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா?

இப்ப டாப்பிகுக்கு வருவோம். சிறுதானியங்கள் புதுசு கிடையாது, நம்ம தாத்தா பாட்டிசாப்பிட்ட தானியங்கள் தான். இந்தியாவில் முதன்முதலாக பயிர் செய்யப்பட்டுபயன்படுத்தப்பட்டவை. பல சங்க இலக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ள இத்தானியங்கள்கடந்த இருபது வருடங்களில் குறைந்து மறைந்தே விட்டன. இப்போது பல சமூகஅமைப்புகள் மற்றும் அரசாங்கம் மூலமாக ஆரோக்கிய உணவுகள் மீது ஒரு சின்னவெளிச்சம். இப்போது பல இடங்களில் பரவலாக மீண்டும் பயிர் செய்யப்பட்டுமக்களிடையே புழக்கத்துக்கு வந்துள்ளது.

கேழ்வரகு (ராகி), கம்பு, சோளம் ஆகியவை சிறுதானியங்கள் (Major millets) என்றும்பனிவரகு, சாமை, திணை, குதிரைவாலி, வரகு ஆகியவை குறுதானியங்கள் (minor millets)என்றும் அதன் வடிவத்துக்கேற்ப வகைப்படுத்தப் படுகின்றன. ஆனால் இவை அனைத்தும்சிறுதானியங்கள் என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றன. இனி நாமும் அவ்வாறேகுறிப்பிடுவோம்.

சிறுதானியங்களின் சிறப்பியல்புகள்:

  1. குட்டை ரக அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவைகளை விட சத்துக்களில்மேன்மையானது
  2. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், ரிபோபிளேவின், போலிக்அமிலம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் உள்ளது
  3. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமானநோய்களை குணப்படுத்தும்.
  4. ஆஸ்த்மா, ஒற்றை தலைவலி, இதய நோய் மற்றும் புற்று நோய் ஆகியவற்றைதவிர்க்க உதவுகிறது.
  5. இவற்றில் உள்ள phyto chemicals நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  6. Glycemic index குறைவாக இருப்பதால் மெதுவாக குளுக்கோசை ரத்தத்தில்கலக்கச் செய்வதன் மூலமாக சக்கரையின் அளவைக் குறைக்கும்.
  7. குறைந்த அளவே சாப்பிட்டாலும், நன்றாக சாப்பிட்ட திருப்தி ஏற்படுவதால்உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

அதுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொரு தானியத்தைப் பத்தி பாக்கும் போது விரிவாஎல்லா சிறப்புகளையும் சொல்றேன்.

ஒன்னு கவனிச்சிங்களா, சக்கரை நோய் பத்தி ஒரு பாயிண்ட் தான் சொல்லிருக்கேன்.சும்மா சொல்லிக்கிட்டே இருந்தா சரிப்படாதுன்னு சில ஆராய்ச்சி முடிவுகளை உங்கபார்வைக்கு தந்திருக்கேன்.

      1.      Millet breakfast reduces blood sugar: study

http://www.thehindu.com/news/cities/chennai/millet-breakfast-reduces-blood-sugar-study/article5668508.ece
“The study found the low glycemic index millet-based breakfast was effective in significantly reducing post-prandial glucose levels as compared to rice-based breakfast in all participants –  Dr. Vijay Viswanathan, chief diabetologist”
2.  Millet connection http://www.thehindu.com/features/magazine/millets-in-ones-diet-can-help-prevent-diabetes/article6574465.ece“Studies have reported that the consumption of millet-based food items produced the lowest post-prandial glucose levels i.e. after a meal.Millet’s high fibre content slows digestion and releases sugar into the bloodstream at a more even pace.This helps avoid the abnormal spikes in blood sugar of diabetes patients.Thus, a healthy diet that provides the highest quality of nutrients and is low in fat and moderate in calories benefits diabetics and help manage blood glucose, blood pressure and cholesterol.”

  1. Kodo millet helps keep diabetes under check

http://timesofindia.indiatimes.com/home/science/Kodo-millet-helps-keep-diabetes-under-check/articleshow/25574439.cms

“The data on the phytochemicals of kodri substantiates the anti-diabetic property exhibited by this grain. Also, the presence of phospholipids, fibre contents and low oil content … makes this grain a true nutraceutical – Professor M Daniel, MS University”  


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s