நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்?

எல்லாமே துரிதமயமாகிவிட்ட உலகில் ஆரோக்கியம் சரியாக இருக்கும் வரை யாரும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை. உடல் பருமன், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் என நோய்கள் சூழ்ந்த உடல் வருத்தத் தொடங்கும் போது மட்டுமே நம் கவனத்துக்கு வரும் ஆரோக்கியம் பிறகு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குள்ளாகி மருந்துகளையே உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகிறது. நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக உடல் நிலையை சரி செய்யலாம். தமிழன் … More நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்?

தமிழன் டயட் – அறிமுகம்

  இது பக்கம் தான் புதிது. ஆனால் விஷயங்கள் மிகப் பழையவையே. சரியான உணவுமுறைகள் குறித்து அறிவியல் கலந்து உண்மையை எடுத்து சொல்வதே நம் நோக்கம். எல்லாரையும் போலவே நமது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மேல் கொஞ்சம் கர்வமும் அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப் போனதில் நிறைய வருத்தமும் எனக்கும் உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சந்தேகமில்லை. அதை ஒரு எல்லை வரை அனுமதிப்பதே புத்திசாலித்தனம். நம் வீட்டுச் சமயலறைக்குள்ளேயே யாரையும் அவ்வளவு எளிதில் … More தமிழன் டயட் – அறிமுகம்

தமிழன் டயட் – துவக்கம்

மறந்துவிட்ட நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்க ஒரு சிறு முயற்சியாக இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். தினம் இந்தப் பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து குறித்து செய்திகள் இடம்பெறும். நமது தமிழன் டயட் பக்கத்தின் முகநூல் – https://www.facebook.com/pages/ThamizhanDiet/1625588151015232 … ட்விட்டர் – @ThamizhanDiet தொடருங்கள், பயன் பெறுங்கள்.. நன்றி Rajashree K. Sathees., MSc., PhD