சூரிய காந்தி எண்ணெய் வேணும்ன்னு ஒரு ஆஸ்திரேலியா வாடிக்கையாளர் கேட்டாங்கன்னு சில சப்ளையர்களிடம் பேசினேன்.
சில சன் பிளவர் ஆயில் உற்பத்தியாளர்கள் கிட்ட நேரடியா பேசும் வாய்ப்பு வந்தது.
நூறு சதவீத சுத்தமான எண்ணெய் வேண்டும்
அவங்களும் இது சுத்தமான எண்ணெய் தான்.
நீங்களே தயாரிக்கறீங்களா?
ஆமாம்
லிட்டர் எவ்வளவு சார்?
70 ரூபா!(ஷாக்க மறச்சுட்டு) எப்படி இவ்வளவு கம்மியா தரீங்க? சுத்தமான எண்ணெய்?
சன் பிளவர் விதை எவ்வளவு வரும் சார்?
நம்ம ஊர்ல சன் பிளவர் எல்லாம் அதிகமா இல்லைங்க, ரஷ்யால இருந்து க்ரூட் ஆயில் வரும் அது திக்கா இருக்கும், அத எங்க ப்ளான்ட்ல மாத்தி கலர் நீக்கி, பில்ட்டர் பண்ணி refine செஞ்சு pure ஆ குடுக்கறோம்.
ரைஸ் பிரான் ஆயிலும் அதேமாதிரி தான். அதோட விலையும் 70 தான்.. உங்களுக்கு எவ்வளவு வேணும்?
நான் அப்பறமா போன் பண்றேன்னு சொல்லிட்டு வச்சுட்டேன்
நம்ம ஊர்ல எல்லாருமே அந்த crude ஆயில்ல கிடைக்கற எண்ணெய் தான் பத்து வருசத்துக்கு மேல சாப்பிட்டுட்டு இருக்கோம்.ஒரே நைட்ல மாத்தற விஷயம் இல்ல இது
இந்த பத்து வருசத்துல எல்லாமே விலை ஏறி இருக்கு.. ஆனா எண்ணெய் மட்டும் விலை ஏறலேன்னு யாருமே யோசிக்கல!
சமையல் எண்ணெய் விலை 80 ருபாய்ன்னு நம்ப வச்சுட்டாங்க.. என்னது கடலை எண்ணெய் இத்தன ரூபாயா, வேண்டாங்கன்னு சொல்றவங்க அதிகம்.
ஆனா மத்த நொறுக்குத் தீனி, பிரியாணி, துணிமணி, ஷாப்பிங் ன்னு நம்ம எதுக்கும் காசு பத்தி யோசிக்கறதில்லை.
நம்ம மக்கள் சூப்பர் மார்க்கெட்ல மட்டும் தன்னோட வருமானத்துல 30% செலவு பண்றாங்கன்னு ஒரு புக்குல படிச்சேன். அது ஆரோக்கியத்துக்கானதா என்பது ???
ரெண்டாவது விஷயம் தீப எண்ணெய்:
எல்லா சன் பிளவர் எண்ணெய்க் கம்பெனிகளும் தீபத்துக்கு ஊத்தற எண்ணெய் அவங்க பிராண்ட்ல விக்குறாங்க, பல வகையான விளம்பரங்கள் கூட வருது. அது எப்படின்னா, சாப்பிடற எண்ணெய் 85 ரூ, தீபத்துக்கு ஊத்துற எண்ணெய் 140 ரூபாய். ரொம்ப நல்லா விக்குது, ஏன்னா நம்ம எப்போதும் உபயோகப் படுத்தற நல்லெண்ணைய விட இந்த எண்ணெய் விலை மலிவு. சாமிக்கே டிமிக்கி 😦
எல்லா தீப எண்ணெய் வகைளின் லேபிள்ல போட்டுருக்கறது “நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணை, ரைஸ் பிரான் ஆயில்” ஆனா அந்தக் கம்பெனிகளோட மெயின் product சன் பிளவர் ஆயில் தான். இந்த தீப எண்ணைகள்ள போட்டுருக்க எண்ணெய் அவங்ககிட்ட தனிதனியாக் கிடையாது.
சரி, நம்மகிட்ட எல்லா எண்ணையும் சுத்தமா இருக்கேன்னு தீப எண்ணெய்க்கு கணக்குப் போட்டுப் பாத்தேன்.. அடக்க விலையே இருநூறு ரூபாய்க்கு மேல வருது.
சாமிக்கு நல்ல எண்ணெய்ல விளக்கேத்துங்க மக்களே, சுத்தமான எண்ணெய்ல ஒரு மணம் இருக்கும், அது நம்ம வீட்டுல உள்ள நெகடிவ் எனெர்ஜிய விரட்டுமாம். நல்ல எண்ணெய் காசு அதிகம்ன்னு நெனச்சா மனசுல விளக்கேத்தி சாமி கும்புடுங்க. வாசனை எண்ணெய்ன்னு மத்தத வாங்கி ஏமாறாதீங்க, சாமிய ஏமாத்தாதிங்க.
தரமான செக்குல ஆட்டுன நல்லெண்ணெய் கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் உபயோகிக்க பழகுங்க.. நேரம் இருக்கறவங்க நல்ல தரமான கடலை எள்ளு வாங்கி கடைல குடுத்து அரைத்து வாங்கி பயன்படுத்துங்க. உடல் பருமன், ரத்த அழுத்தம், சக்கரை நோய், மாதவிடாய்க் கோளாறுகள், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், எலும்பு தேய்மானம் ஆகிய பல குறைபாடுகளில் இருந்து உங்களப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
தமிழன்டயட்