மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்

மாங்காய் இஞ்சின்னு ஒரு காய்/கிழங்கு வகை உள்ளது. கோவையில் திருமணங்களில் வைக்கப் படும் மாங்காய் இஞ்சி ஊறுகாய் மிகவும் ருசியானது. இங்கே இணையத்தில் தேடியதில் உருப்படியான குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆகவே கோவையில் ஒரு சமையல் கலைஞரைப் பிடித்து செய்முறை தெரிந்துகொண்டு செய்து பார்த்தேன்.

மாங்காய் இஞ்சி: அறிமுகம் 

ginger-350x250

மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. பயன்பெறும் பாகம்: இச்செடியின் மண்ணிற்குக் கீழ் உள்ள தண் டுக்கிழங்குதான் நாம் பயன் படுத்தும் மாங்காஇஞ்சி. இதை தாவர வியலில் ரைசோம் என்று அழைக்கிறார்கள்.
வந்த விதம்: மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்த மாக பெயர் சூட்டியுள்ளார்கள். அடங்கியுள்ள சத்துப் பொருள்கள்: நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன. மாங்காய் வாசனையின் காரணம்: மாங்காய் இஞ்சியிலுள்ள மாங்காய் வாசனைக்கான காரணம் இதில் உள்ள சீஸ் – ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருட்கள் ஆகும். இதில் அடங்கி உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் இதற்கு மிக லேசான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒரு வகை ஒலியோரெசின், போர்னியால், ஆர்டர்மிரோன் இவை இஞ்சியின் சுவையை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மா இஞ்சி: 
’மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள்மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி! மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர் வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது. வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும் தன்மை மாங்காய் இஞ்சிக்கு உண்டு.
வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். சுருங்கச் சொன்னால் மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும். மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும். குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி.
சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது. மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.
Source: http://adiraipirai.in/?p=76
மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய் செய்முறை:
1. தேவையான பொருட்கள்: 
மாங்கா இஞ்சி – 250 g
ப. மிளகாய் – 15
வெ. பூண்டு – 15 பல்
கடுகு – 1 spoon
வெந்தயம் – 1/2 spoon
பெருங்காயம் – 1/2 spoon
உப்பு – தேவையான அளவு
புளி – 150 g
வர மிளகாய்ப் பொடி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 150 ml
thevaiyana porutkal
2. தாளிக்க செக்கில் ஆட்டப் பட்ட சித்திரை நல்லெண்ணெய் பயன்படுத்தப் பட்டது.
chithirai nallennai
3. மாங்காய் இஞ்சி + பச்சை மிளகாய் +வெள்ளைப் பூண்டு = ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும் , புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
araittha kalavai
4. நல்லண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து அரைத்த விழுது, புளி சேர்த்து கொதிக்க வைக்கவும். காரத்துக்கேற்ப மிளகாய்ப் பொடி சேர்த்துக் கொள்ளவும் (தேவைப்படின்).
thaalitthal
5. மாங்கா இஞ்சி ஊறுகாய் ரெடி!
oorukaai
செய்முறை : கோவை சமையல் கலைஞர்
நன்றி
தமிழன்டயட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s