நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை பரிச்சயம்.
ராகியில், பாலில் உள்ளதை விட அதிகமான கால்சியம் உள்ளது. ராகிக் கூழ் குழந்தைகளுக்கேற்ற முழுமையான உணவாகும்.#BestBabyfood
கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு ராகி.
நூறு கிராம் ராகியில் 350 மி.கி. அளவு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளது. இது மற்ற எல்லா வகை தானியங்களை விட அதிகம்.
அதேபோல 100 கி ராகியில் 4 மி.கி. வரை இரும்பு சத்து நிறைந்துள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் ராகி சாப்பிட்டு குணமடையலாம்.
ராகி அதிக நார்ச்சத்து உடையது.
குளுட்டன் இல்லாதது.
தையமின், ரிபோபிளேவின் ஆகிய உடலுக்குத் தேவையான அமினோ அமினோ அமிலங்கள் கொண்டது.
ராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்.
மேலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது,
ராகி உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
குடலுக்கு வலிமை அளிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.
ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் சிறுநீரகக் கல் கோளாறு உள்ளவர்கள் குறைவாக உண்ணுதல் நலம்.