பிரண்டை பயன்கள்

DSC09188-12

 

பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு.

பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு
பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன.

பிரண்டைத் துவையல் பசியின்மை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், குடல் புழு, வாயுத் தொல்லை ஆகியவற்றைக் குணமாக்கும்

பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க
வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும்

பிரண்டையை நெய்விட்டு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, தினமும் காலை, மாலை என்று இரு வேளையும் (8 நாள்) சாப்பிட ஆசனத்தினவு, ரத்தமூலம் ஒழியும்.

பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்

பிரண்டை சாற்றுடன் புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடையும்

பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்பொருமல், வாயுத்தொல்லை மட்டுப்படும்

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பிரண்டையின் சாறு நமைச்சல் ஏற்படுத்தும். ஆகவே சுத்தம் செய்யும் போது கைகளில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை தடவிக் கொள்ளலாம்.

எலும்பை இரும்பாக்கும் பிரண்டை:
இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத எலும்பு உதிர்வு நோயான ஆஸ்ட்ரியோபோரசிஸ்க்கு பிரண்டை கைகண்ட மருந்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s