நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்?

எல்லாமே துரிதமயமாகிவிட்ட உலகில் ஆரோக்கியம் சரியாக இருக்கும் வரை யாரும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை.

உடல் பருமன், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் என நோய்கள் சூழ்ந்த உடல் வருத்தத் தொடங்கும் போது மட்டுமே நம் கவனத்துக்கு வரும் ஆரோக்கியம் பிறகு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குள்ளாகி மருந்துகளையே உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக உடல் நிலையை சரி செய்யலாம். தமிழன் டயட்டின் முக்கிய நோக்கமே உணவை மருந்தாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே.

“வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்” 

என்னும் வள்ளுவன் குறளுக்கேற்ப நாம் நம்மை நோய் வருமுன்னே காத்துக் கொள்ளலாம். சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் என எல்லாவற்றிக்கும் தமிழ் உணவுகளை உண்டு அவற்றிற்கும் தீர்வு காணலாம்.

இந்த பகுதியில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறு மற்றும் குறு தானியங்கள் அவற்றின் வகைகள், பயன்கள், உணவு சமைக்கும் முறை ஆகியவற்றை தொகுத்து அளிக்கவிருக்கிறோம்.

பல்வேறு தளங்களை சேர்ந்த வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த பாரம்பரிய உணவுகள் பற்றிய தகவல்களையும் குறிப்புகளையும் தந்தால் அவர்களின் பெயருடன் பதிவிடப்படும்.

நன்றி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s