கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு என்பார்கள். கொள்ளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் உள்ளது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கிய இடமுண்டு.
மிக அதிகமான புரதம் கொண்ட பருப்பு வகை கொள்ளு. அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், குறைவான கொழுப்பு மற்றும் சோடியம் கொண்டது.
கொள்ளு வேக வைத்த தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும், நச்சுத் தன்மையை போக்கும்
வளரும் குழந்தைகள் மற்றும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.
நீரழிவு மற்றும் உடல் பருமன் உடையவர்களுக்கு ஏற்ற உணவு.
மூல நோய், ருமாட்டிசம், அல்சர் சிறுநீரகக் கற்கள், அதீத ரத்தப் போக்கு, இருமல், சளி, காய்ச்சல், ஆஸ்துமா ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து கொள்ளு.
கொள்ளில் உள்ள நார் சத்து மலச்சிக்கலுக்கு நிவாரணம் மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது
கொள்ளில் உள்ள கால்சியம் , பாஸ்பரஸ், இரும்பு, மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் விந்து உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
அதிக/குறைவான இரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொள்ளில் உள்ள இரும்புசத்து சரி செய்கிறது.